யாழ்மொழிபதிப்பகம்

யாழ்மொழி பதிப்பகம்

யாழ்மொழி பற்றி...!

வாசிப்பின் மீதும் எழுத்தின் மீதும் கொண்ட ஆழமான பற்றினால், 14 ஏப்ரல் 2024 அன்று யாழ்மொழி பதிப்பகம் தொடங்கப்பட்டது.

14 ஏப்ரல் 2024தொடக்கம்
தந்தைமொழிமுதல் வெளியீடு
தூத்துக்குடி, தமிழ்நாடுஊர்
யாழ்மொழி நூல் வெளியீட்டு அரங்கில் எழுத்தாளர்களும் விருந்தினர்களும்
புதிதாக வெளியிடப்பட்ட நூல்களுடன் மேடையில் எழுத்தாளர்கள்

புதிய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், அவர்களின் எழுத்துகள் வாசகர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்களது பயணம் தொடங்கியது.

யாழ்மொழி பதிப்பகத்தின் முதல் வெளியீடான ‘தந்தைமொழி’ நூல், நிறுவனரும் பதிப்பாசிரியருமான செந்தமிழினி ந.பா. மேஹவர்ஷினி அவர்களால் எழுதப்பட்டது. ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்தப் பயணம், இன்று பல்வேறு எழுத்தாளர்களின் கனவுகளையும் படைப்புகளையும் நூல்களாக மாற்றும் இலக்கியப் பயணமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

எங்கள் பயணம்

ஒரு சிறிய முயற்சியிலிருந்து

  1. 14 ஏப்ரல் 2024

    யாழ்மொழி பதிப்பகம் தொடங்கப்பட்டது.

  2. முதல் வெளியீடு

    செந்தமிழினி ந.பா. மேஹவர்ஷினி எழுதிய “தந்தைமொழி”.

  3. 24 மே 2026

    தூத்துக்குடியில் நூல் வெளியீடு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு: 13 நூல்கள் வெளியிடப்பட்டன.

யாழ்மொழியின் நோக்கம்

எழுதும் ஒவ்வொருவரின் கனவுக்கும் ஒரு நூல் வடிவம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.

புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல், அவர்களின் படைப்புகளைத் தரமான நூல்களாக வெளியிடுதல், தமிழ் இலக்கிய உலகில் புதிய படைப்பாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

யாழ்மொழியின் பார்வை

ஒவ்வொரு நூலுக்குப் பின்னாலும் ஓர் எழுத்தாளரின் கனவு இருக்கிறது. அந்தக் கனவை மதித்து, ஒவ்வொரு படைப்பின் தனித்துவத்தையும் பாதுகாத்து, தரமான நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் பார்வை.

எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான அழகான பாலமாகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் பதிப்பகமாகவும் திகழ்வதே எங்களின் விருப்பம்.

யாழ்மொழியின் இலக்கு

புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், தரமான நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதும், வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதும் எங்களின் நீண்டகால இலக்காகும்.

ஒவ்வொரு எழுத்தாளரின் முதல் நூல் வெளியீட்டுப் பயணத்திற்கும் துணையாகவும், ஒவ்வொரு வாசகரின் தேடலுக்கும் தோழமையாகவும் யாழ்மொழி பதிப்பகம் தொடர்ந்து பயணிக்கும்.

செயல்பாடுகள்

யாழ்மொழியின் செயல்பாடுகள்

எங்களிடம் பேசுங்கள்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்களை வெளியிடுதல்

நூல்களுக்கான அட்டைப்படம் மற்றும் உள் வடிவமைப்புப் பணிகள்

ISBN தொடர்பான பதிப்புப் பணிகள்

நூல் அச்சிடுதல் மற்றும் வெளியீட்டு ஏற்பாடுகள்